Description
பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது’ என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம்.
உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போதும் நறுமணா’ என்கிற வரி, ’மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?’ என்று கேட்ட அக்கமகாதேவியின் ஒளியில் மின்னி மறைகிறது.
மழையிருட்டில் முட்செடிகளில் படபடக்கும் இந்தக் கவிதைகளில் தவிக்கும் ஒரு ஜீவிதத்தை எளிதாகக் கடந்து போக இயலவில்லை மின்மினிகளைப் போல.
– கவிஞர் பழநிபாரதி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.