Description
‘கறுப்புப் பூனை குறுக்கே போனால், போகிற காரியம் உருப்படாது.’
‘காக்கை நம் உச்சந்தலையில் எச்சமிட்டால், அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி.’
– என்பது போன்ற நம்பமுடியாத நம்பிக்கைகள் நம் நாட்டில்தான் தொன்றுதொட்டு இருக்கின்றன என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். அது முற்றிலும் தவறு. உலக நாடுகள் அனைத்திலும் இத்தகைய நம்பிக்கைகள் இன்றும் உலா வருகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படிப்பட்ட நம்பிக்கைகளை விஞ்ஞானபூர்வமாக விளக்கவும் முடியாது; அறிவுபூர்வமாக அலசவும் முடியாது. கண்களுக்குத் தெரியாத, புலன்களுக்குப் புலப்படாத ஏதோ ஒரு சக்தியின் மீதுள்ள ‘பயம்’தான் மூடநம்பிக்கைகள் உருவானதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் ஐ.நா. சபையின் அங்கீகாரத்தைப் பெற்ற நாடுகள் 195 என்று சொல்லப்படுகிறது. இவற்றில் நமக்குத் தெரிந்த ஓரளவு கேள்விப்பட்ட 103 நாடுகளில் உலாவரும் மூடநம்பிக்கைகள் மட்டுமே இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதி முன்னேற்றம் அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றும் மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் இல்லாமலில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
– ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.