Description
இஸ்லாம் குறித்து எழுதும் நிபுணர்களில் ஜியாவுதீன் ஸர்தாரும் ஓருவர். இறைத்தூதராக மட்டும் பாராமல் ஒரு மனிதராகவும் முகம்மதை இந்த நூலில் காண விழைகிறார் ஜியாவுதீன். இதற்காக ஆதாரமான மூல நூல்களை அணுகியும், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவைப் பற்றிய புதிய ஆராய்ச்சியைச் சேர்த்தும், இதுவரை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டிருந்த முகம்மதின் தனிப் பண்புகள், அவரின் விழுமியங்கள், அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றின்மீது ஜியாவுதீன் கவனம் செலுத்துகிறார். நீதி, சமத்துவ உணர்வு, விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவும் பேரார்வம் ஆகியவற்றால் தூண்டப்பெற்ற முகம்மது என்ற மனிதரை இந்த நூலில் காண்கிறோம். ஏராளமான இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு நல்ல சமூகத்தை நிறுவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மனிதர் அவர்.
இந்த நூல் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாகச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. சமய நம்பிக்கை கொண்டவர்களோ நம்பிக்கை இல்லாதவர்களோ அனைவரையும் இந்த நூல் ஈர்க்கும். வரலாற்றின்மீது மகத்தான தாக்கம் ஏற்படப் பங்களிப்புச் செய்த முகம்மதின் தனித்துவமான பண்புக் கூறுகளை மீண்டும் கண்டுகொள்ளும் அறிமுகமாக இந்த நூல் விளங்குகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.