Description
பாசிசம் இன்றளவும் அரசியலில் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கம் செலுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். பாசிசம் என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது முசோலினி.
யார் இந்த முசோலினி?
சாதாரணக் குடும்பத்தில் பிறந்த முசோலினி, இத்தாலியை இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறி, பின்னர் மக்களாலேயே கொல்லப்பட்டார். பாசிசத்தின் கோரப் பற்களை உலகுக்குப் பறை சாற்றினார். அரசு அமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பிரசாரத்தின் வழியாகத் தன்னை நிகரற்ற தலைவனாக முன்னிறுத்திக்கொண்டார். வன்முறை மற்றும் ஏகபோக அணுகுமுறை வாயிலாகத் தன் இடத்தை நிறுவினார். ஹிட்லருடன் இணைந்துகொண்டு யூத வெறுப்பை முன்னெடுத்தார்.
இப்படி உலகமே வெறுக்கும் பாசிஸ்ட்டாக வலம் வந்த முசோலினியின் வாழ்க்கை வரலாற்றையும் பாசிசத்தையும் ஆதி முதல் அந்தம் வரை விவரிக்கும் நூல் இது. எளிமையான தமிழில் எழுதி இருக்கிறார் ப.சரவணன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.