Description
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் ஆசிரியர், அங்கு வளரும் சில அரிய தாவரவகைகளைப் பற்றி எழுதுகிறார். படிக்கப் படிக்க ஆர்வம் கூடியது.
உலர் பசுமை மாறாக்காடுகள் பற்றியும் தொண்டை, ஈர்க்கொல்லி, கொடிப்புனலி, வீரமரம், குமிழம், சீற்றீசை, அசினங்கொடி போன்ற தாவரங்களைப் பற்றியும், அந்தத் தாவரங்கள் எங்கு தென்படும், அவற்றின் பயன்கள் என்ன என்பது பற்றியும் மிக அழகாக விளக்கியுள்ளார்.
பயணக்கட்டுரை எழுதுவது எளிதல்ல. அதையும் விறுவிறுப்பாக தருவது கடினமான செயல். ஆசிரியர் அந்தக் கலையில் நன்கு தேர்ந்திருக்கிறார். யாஷினியின் நண்பர்களான சித்தார்த், துருவ் இருவரையும் இணைத்த விதமும் அழகு.
சிறார்களுக்காக எழுதப்பட்ட அழகான பயணக்கட்டுரை. ஆசிரியரின் சிறப்பான எழுத்துநடையும், தெளிவான தமிழும், எடுத்துக்கொண்ட தலைப்புக்கேற்றபடி அள்ளி வழங்கப்பட்ட எண்ணற்ற தகவல்களும் என்னை வியக்கவைத்தன.
– புவனாசந்திரசேகரன்,
ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் மற்றும் சக எழுத்தாளர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.