Description
வெவ்வேறு களத்தையும் காலத்தையும் பின்புலமாகக் கொண்ட பதின்மூன்று கதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை அனைத்தும் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பது மட்டும் இவற்றுக்கு இடையிலான ஓற்றுமை. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதிக்கு முந்தைய ஆண்டுகள் முதல் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டுகள் வரையான காலப் பகுதியில் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். அந்தந்தக் காலத்தின் அடையாளங்களையும் அந்தந்த இடத்தின் சின்னங்களையும் அந்தந்த மக்கள் இனத்தின் வாழ்வனுபவங்களையும் இவை எதிரொளிக்கின்றன இலக்கியக் கலையின் உச்சம் என்று போற்றப்படும் எழுத்தாளர்களும் அறிமுகச் சாதனையாளர்களும் கதைகளின் பின்னணியில அணிவகுக்கிறார்கள்.மூலத்தின் செறிவுக் குறையாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கதைகள் தமிழ் வாசகனிடம் ஒரு செய்தியை சொல்கின்றன. அது – கதை என்பது வெறும் புனைவு மட்டுமல்ல
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.