குற்றமும் தீர்ப்பும்
அரசியல் கொலையும் சி.பி.ஐ. விசாரணையும்
₹200 ₹190
Additional Information
Description
1987ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து பெங்களூருவுக்குச் சொந்த வேலையாக வந்த வழக்கறிஞர் அரசியல் வணிகப் போட்டியில் சிக்கித் தன் உயிரை இழந்தார். இரண்டு முறை பிணக்கூராய்வு செய்த பிறகும் காவல் துறை விசாரணை நடந்தும் அக்கொலையின் மர்மம் விலகவில்லை. காவல் துறை இதனைத் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்க முனைந்தது. வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது. புலனாய்வு செய்யும் பொறுப்பு குப்புசாமி ரகோத்தமன் என்னும் சி.பி.ஐ. அதிகாரிக்கு வழங்கப்பட்டது. மூன்று மாநிலங்கள், ஆயிரக்கணக்கான ஆவணங்கள், காவல் துறை, அரசியல்வாதிகள் ஆகியவற்றினூடே ரகோத்தமன் தன் தேடலை மேற்கொண்டார். அவருடைய புலனாய்வு காவல் துறை அதிகாரிகளையும் மாநிலத்தின் உள்துறை அமைச்சரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அந்த வழக்கு என்ன ஆனது? குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அதிகாரம் உண்மையை வென்றதா?
சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமனைச் சந்தித்து இந்த வழக்கின் விவரங்களைக் கேட்டறிந்த இதழியலாளர் வி. சுதர்சன் இக்கொலை வழக்கின் கதையை விறுவிறுப்பான நாவல்போலப் பதிவுசெய்திருக்கிறார். காவல் துறையின் போக்கு, அரசு அதிகாரம், சி.பி.ஐ.யின் செயல்பாடு ஆகியவற்றைத் துல்லியமாக விவரிக்கும் இந்த நூல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தை விளக்குகிறது. அதிகார மட்டங்களில் உண்மைக்கு என்ன மதிப்பு என்பதையும் காட்டுகிறது.
Additional information
Author | |
---|---|
Translator | |
Category | |
Sub Category | |
Edition | 1st (First) |
Year Published | |
Binding | Paperback |
Language | |
ISBN | 9788119034406 |
Pages | 167 |
Publisher | |
Special Category |
Be the first to review “குற்றமும் தீர்ப்பும்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.