கோவையின் பிரபலமான சரித்திர ஆய்வாளர். வெராண்டா கிளப் என்ற சமூக அமைப்பின் மூலம் இலக்கிய சமூகப் பிரமுகர்களைக் கோவைக்கு அழைத்து அறிமுகப்படுத்துபவர். ‘ஹெரிடேஜ் வாக்’ என்னும் பெயரில் கோவை நகரின் சரித்திரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்பவர். கோவை இன்று தென்னிந்தியாவின் தங்க வியாபாரத் தலைநகராகத் திகழ்வதற்குக் காரணமான
திரு ராஜு செட்டியாரின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தேடினாலும் கிடைக்காது’ என்பதற்கேற்ப வேறெங்கும் காணக் கிடைக்காத கட்டுரைகள் இவை. சாதனையாளர்கள் மட்டுமன்றிச் சாமானியர்களும் இக்கட்டுரையின் கதாநாயகர்கள். அறியப்பட வேண்டிய ஆளுமைகள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் முழுக்க முழுக்கக் களப் பயணத்தின் பின்னணியில் படைக்கப்பட்டவை. எளிய தமிழில் அழகிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்நூல் எதிர்கால வரலாற்றில் ஒரு மைல்கல்.
ஆசிரியக் குடும்பப் பின்புலத்திலிருந்து ஆசிரியப் பணிக்கு வந்திருப்பவர். மொழிபெயர்ப்புத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டவர். சென்னை (மாநகராட்சி) பள்ளியன்றில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
த.கவிதா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.