Description
அடிமைத்தளை தீவிரமாக வேரூன்றியிருந்த அமெரிக்கத் தெற்கு மாநிலங்களில் கறுப்பின மக்களது அப்போதைய வாழ்நிலையின் அவலங்களையும் வேதனைகளையும் இந்தத் தன்வரலாற்று நூலில் கவிஞர் மாயா ஆஞ்சலு விரிவாகக் கூறுகிறார். பல்வேறு நெருக்கடிகளோடு போராடும் நிலையிலும் மனஉறுதியால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள விழையும் கவித்துவ மனதின் குரலே இந்த நூல்.
வன்மமில்லாத வேதனை வெளிப்பாடுகள், கழிவிரக்கமற்ற துயரப் பதிவுகள், நிராசை நிலையிலும் தோன்றும் நம்பிக்கைக் கீற்றுகள் என மாயா தனது மனவோட்டங்களை உயிரோட்டத்துடன் பகிர்ந்துகொள்கிறார். பாட்டி, தாய், சகோதரன் ஆகிய பாத்திரங்கள் வாசகர் மனங்களில் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துவது மாயா ஆஞ்சலுவின் படைப்பாற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.