Description
நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்துவிடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி உருவாக்கித் தருகிறது. அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலான வாக்கிய அமைப்புகளுக்குள் பிசிறின்றி, வார்த்தை வீணடிப்பின்றி எழுதிச் செல்கிறார் ஆசிரியர். அந்தக் காலம் பற்றிய விதந்தோதலையும் நினைவேக்கத்தையும் பெருமிதத்தையும் கூருணர்வுடன் தவிர்த்திருக்கிறார். இவ்வனுபவப் பிரதியில் அங்கங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார வழக்கில் சுவையையும் இனிமையையும் உணரலாம். இலங்கையின் பல்வேறு மக்கள் குழுக்களிடையிலான பேச்சுவழக்குகளின் இன்னொரு தரப்பையும் தமிழ்ச் சூழலுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஈரமும் மென்மையும் கொண்ட மனிதர்களை இந்நூலில் மீட்டெடுத்திருக்கிறார் நபீல். அழுத்தும் சமகால வாழ்விலிருந்து சற்று வெளியேறிக் காலப்பயணம் செய்த அனுபவத்தை இந்நூல் தருகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.