Description
இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.
திருமணத்தில் வெற்றி பெற்றவர்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதையும் திருமண உறவில் தோல்வி அடைந்தவர்கள் ஏன் தோல்வி அடைந்தீர் என்பதையும் வெளிப்படையாக பேசுங்கள் என்கிறார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் அதற்கான ஊக்கம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு என்ற ஒரு கட்டுரைக்காகவே இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கலாம். பெண்கள் பேசத் தயங்குகிற விஷயத்தை ஒரு பெண் பேசி இருக்கிறார் அதனால் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டும். பெண்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பேசி இருக்கிறார் எனவே பெண்களும் அவசியம் படிக்க வேண்டும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.