Description
ஆப்பிரிக்காவின் வெவ்வேறு இடத்திலிருந்து ப்ரஸல்ஸின் சிவப்பு விளக்குப் பகுதியை சென்றடைகின்றனர் நான்கு பெண்கள். ஐரோப்பாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கனவுடன் வந்த அவர்களில் ஒருத்தி – சிஸி – கொலையான செய்தி கேட்டவுடன் அவர்களின் மெல்லிய உலகம் உடைந்து சுக்குநூறாகிறது.
போரினால் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கும் பேரழகி ஜாய்ஸ், கடந்தகாலத்தில் தனக்கு நிகழ்ந்த அநீதியை மறைக்க எப்போதும் கடுகடுப்புடன் இருக்கும் அமா, தனிப்பட்ட காரணத்தால் தனக்குக் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் எஃபே, இவர்கள் மூவரும் இத்துன்ப நிகழ்வினால் ஒன்றிணைந்து தத்தம் கதைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அவை அச்சத்தின், காதலின், புலம் பெயர்தலின் கதைகள். முக்கியமாக அவை யாவும் டெலே என்னும் கபட மனிதனைப் பற்றிய கதைகள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.