Description
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும், சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது.
வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை, சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் அழியாத சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறது இந்நூல். விரிந்து நீண்ட களப்பணிகளில் திரட்டிய தரவுகளின் மூலம் மறைந்துபோன மெய்யான வரலாற்றைக் கற்பனை போலக் கட்டமைத்துள்ள இந்தப் புதினம், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
மமாங் தய்: கவிஞர், இதழாளர், புனைகதைப் படைப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். தமது இலக்கியப் படைப்புகளுக்காகவும், கல்வித்துறையில் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும் பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்நூலாசிரியர், அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரில் வசிக்கிறார்.
கண்ணையன் தட்சிணாமூர்த்தி: இந்திய ஒலிபரப்புப் பணியின் உயர் அலுவலர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்களைத்தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர், தற்போது அகில இந்திய வானொலியின் புதுச்சேரி நிலைய இயக்குநர் பொறுப்பில் உள்ளார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.