Description
கேசட்டுக்குள் இருக்கும் நீண்ட கொக்கோ நிற நாடாவில் பாடல்கள் எப்படி பதிந்து கிடக்கின்றன. என்பதை புரிந்துகொள்ள முடியாமல் அவள் குழம்பி இருக்கிறாள். அத்தனை இசையும் குரலும் அந்த மெல்லிய நாடாவுக்குள் வரிசை பிசகாமல் வைக்கப்படும் மாயம் அவளை ஆச்சரியப்படுத்தும். சிறுவயதில், வானொலிப் பெட்டியிலிருந்து எப்படி குரல் வருகிறது என்ற கேள்விக்கு ஆதி தாத்தா “ரேடியோவுக்குள்ள குட்டி மனுசனுங்க ஒக்காந்து பேசுவானுங்க” என்று சொல்லி திகிலூட்டியதுபோலத்தான் அவளுக்கு இதுவும் புதிராக இருந்தது. கேசட் நாடாவுக்குள் பாடல்கள் ஒளிந்திருக்கும் விந்தையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், கேசட்டுக்குள் சுழலும் கொக்கோ நிற நாடாவை வெளியே எடுத்து மீண்டும் கச்சிதமாக உள்ளே வைப்பதில் தனலட்சுமி கெட்டிக்காரி. பொதுவாக, அதுபோல வெளியே வந்து விட்ட நாடாவின் சிக்கை எடுப்பது பெரும்பாடு. ஆனால் தனலட்சுமி குழந்தைக்கு குல்லா பின்னுவதுபோல மிகப் பொறுமையாக கேசட்டை கழற்றி, நாடாவை இழுத்து சிக்கை நீக்கி மீண்டும் சுழலுக்குள் வைத்துவிடுவாள். சக்கரத்தில் நாடா சுற்றத் தொடங்கியதும் பாடல் மீண்டும் ஒலிக்கும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.