Description
வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம்.’ பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.