Description
சுமதியின் பதிவுகள் கட்டுரையா, கதையா, சட்ட நுணுக்கமா அல்லது சட்டச்சிக்கல்கள் பற்றிய தகவல்களா என்று இனம் பிரிக்க முடியாத வகையில் அமைந்துள்ள புதுவகை உரைநடை. சமூகத்தின் கூட்டு நனவிலி மனதின் கலைடாஸ்கோப் படிமங்களை, உண்மைகளை பருண்மையான காட்சிப் படிமங்களாகச் சித்தரிக்கிறது இந்த உரைநடை.
அவரின் எழுத்து நடை வித்தியாசமானதாக இருக்கிறது. பொதுவாக நீதிமன்ற மொழிக்கென்றே ஒரு தனி அகராதி (diction) உண்டு. ஒரு புரோநோட் எழுதுவதற்குக்கூட அதற்கான எழுத்துக்காரர் வேண்டும். பெரும்பாலும் நீதிமன்றம் வழக்குகள், தீர்ப்புகள் சார்ந்த செய்திகளே இதில் சொல்லப்பட்டாலும் சுமதி கைக்கொண்டிருக்கின்ற நடை அலுப்பின்றி அவற்றை வாசிக்க வைக்கும் அழகியலைக் கொண்டிருக்கிறது.
உணர்வுபூர்வமான வலி மிகுந்த பெண்கள் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் நிகழ்வுகளில் அழகியலைப் பற்றி நான் பேசுவது அபத்தமானது. என்றாலும் அதுஅதற்கான அழகியலென்று ஒன்று உண்டு. அதைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்தத் தொகுப்பு.
கலாப்ரியா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.