கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது. காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.