Description
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் கொந்தளிப்புகள் அழுத்தமாகப் பதிவாகின்றன. இட ஒதுக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச் சார்பு இல்லாமல் வெளிப்படுத்தப்படுகின்றன. தர்க்கரீதியான வாதங்களைத் துணைக்கு அழைக்காமல் உணர்ச்சிகளின் தளத்திலேயே யதார்த்தத்தை எதிர்கொள்கிறது இந்நாவல். மாணவர் விடுதி என்னும் பின்புலம் இவ்வளவு துல்லியமாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் பதிவானதில்லை. மண்டல், கோவில் சார்ந்த சலனங்களுடன் ராகிங் என்னும் அம்சமும் நாவலில் கையாளப்படுகிறது. ராகிங்கின் பல்வேறு அம்சங்கள் அவற்றின் குரூரங்களூடன் பதிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் புனைவம்சத்துடனும் தேவையான மௌனங்களுடனும் வெளிப்படுவது நாவலின் கலைப் பெறுமானத்தைக் கூட்டுகிறது. கதாபத்திரங்களின் சித்திரங்கள் கதைப் போக்கிலும் உரையாடல்களிலும் துலங்குவது நாவலாசிரியரின் எழுத்தாளுமைக்குச் சான்றாக விளங்குகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.