Description
தனது சிறுகதைகளில் சென்ட்டிமென்ட், நையாண்டி என இரு காலகட்டத்தைக் கொண்ட ஷாராஜ், “எனது முதல் கட்டக் கதைகளை விரும்புகிற பலரும் சுமார் 20-25 ஆண்டுகளுக்குப் பிறகும் அக் கதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவது வியப்புக்குரியது” என்கிறார். அக் காலகட்டத்தின், இதுவரை தொகுப்பில் வராத முக்கியக் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம், ஜனரஞ்சகம், நடுநிலை என மூன்று ரகங்களும் இதில் உள்ளன. “மண்ணையும், மண்ணில் முளைத்த மனிதர்களையும் கிராமங்களில்தான் பார்க்க முடியும். அவ்வாறு வாழ்ந்து பெற்ற அனுபவமே எனது கதை எழுத்தின் ஆழத்துக்கு ஆதாரம்” என்கிறார் ஆசிரியர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.