“நரேன் ஸ்பீக்கிங்..”
“என்ன நரேன் இப்படி ஏமாற்றிவிட்டாய்..!” முந்தின தினம் கேட்ட அதே குரல். “நேற்றைக்கே உன்னிடம் சொல்லிவிட்டேன். நீ நினைத்திருந்தால் அந்தக் கொலைகளைத் தடுத்திருக்கலாம். ஆனால் அலட்சியம் செய்துவிட்டாயே.. இப்போது பார்.. இரண்டு உயிர் போய்விட்டது.. இருவரையும் கொலை செய்தது நான்தான்..” அந்தக் குரலில் சற்று எள்ளல் இருந்தது.
நரேன் பதறினான். “ஏய்.. யார் நீ.. உன் பெயர் என்ன..?”
“என் பெயருக்கு மூன்றே எழுத்து.. சை-க்-கோ.. என் நம்பரை டிரேஸ் செய்து பிடித்துவிடலாம் என்று கனவு காணாதே.. இன்னும் சில நிமிடங்களில் இந்த எண் உபயோகத்தில் இருக்காது.. வேறு நம்பரிலிருந்து உன்னைத் தொடர்புகொள்வேன்.. அடுத்த கொலை செய்வதற்கு முன்னால்..”
புரிந்துகொள்ள முடியாத ஒரு புத்திசாலி சைக்கோவுக்கும் நரேந்திரனுக்கும் நேரடி சவால். நரேன் இரண்டடி எடுத்துவைப்பதற்குள் சைக்கோ நான்கடி தாவிச்சென்றுவிட.. ஒவ்வொரு முறையும் சவாலில் அவனே வென்றுவிட.. இடையில் சில தலைகள் உருள..
ஒரே மூச்சில் படிக்காமல் வைக்கமுடியாத சுபாவின் சைக்கோ த்ரில்லர்..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.