இயல் இசை நாடகம் நடிகர் திலகம்
₹285 ₹271
- Author: பாலசுப்ரமணியன் இராதாகிருஷ்ணன்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: சினிமா, வாழ்க்கை வரலாறு
- Publisher: வானதி பதிப்பகம்
Additional Information
- Pages: 230
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
முத்தமிழின் செல்வன் வாழ்க!
முக்குலத்தின் கண்மணி வாழ்க!
எக்குலமும் போற்றிட வாழ்க!
எங்களது மன்னவன் வாழ்க!
வாழியவே வாழியவே அவர் புகழ் பல்லாண்டு!
வாழ்த்துகிறோம்; வாழ்த்துகிறோம் நெஞ்ச நிறைவோடு!
…எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாகலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்…
-கவியரசர் கண்ணதாசன்
முப்பரிமாணங்களையும் இயல் இசை நாடகம் என்னும் தன்னுள் அடக்கி மக்களை ஒரு நூறாண்டு காலமாக மகிழ்வித்து கொண்டிருக்கும் கலையின் வடிவம் சினிமா!
தமிழ்நாட்டில் குறிப்பாக சமூகம் மற்றும் அரசியலில் வெகுவாகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கருவியாக திகழ்ந்து இருக்கிறது தமிழ்த் திரைத்துறை.
தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்லாக, அத்துறையின் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் ஒரு அங்கமாக, பிரிக்க முடியாத ஒரு சக்தியாகவும் கோலோச்சியது “விழுப்புரம் சின்னையா கணேசமூர்த்தி!” “நடிகர் திலகம்!” என்று அனைவராலும் அழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் ஒரு காலக்கட்டத்தில் நடிப்பிலக்கணமாக, திகழ்ந்தார் என்றால் அது மிகையில்லை. 1952 முதல் 1999 வரையிலும் கோலோச்சிய ஒரு கலைஞனாக ஒரு மாபெரும் சகாப்தமாக சிவாஜி விளங்கியது அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கண்டு களித்த அனைவரும் மறுப்பதற்கில்லை, மறப்பதற்கும் இல்லை.
முக பாவனை, அங்க அசைவுகள் (உடல் மொழியிலும்) மற்றும் நடையில் கூட உணர்வுகளை, நடிப்பு திறனையும் வெளிப்படுத்த முடியும் என்று ஒரு கலை உலக ஆளுமையாக தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டது சிவாஜி எனும் சரித்திரம்.
தமிழ்ச் சினிமாவின் நடிப்பு முறைமைக்கான நுண்திறன்கள் தன்மைகள் இதுதான் என்று பாடம் புகட்டும்ஒரு ஆசானாக! ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கியவர் சிவாஜிகணேசன்.
சகாப்தங்களை சரித்திரம் பதிவு செய்யத் தவறுவதில்லை. ஏதோ ஒரு வகையில், எத்தனை காலம் கடந்தாலும், சரித்திரம் படைத்தவர்களை இந்த உலகம் நினைவு கூர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தின் ஒரு யுத்தியாக தான் இந்த தொகுப்பாய்வு நூலை நான் காண்கிறேன்.
Be the first to review “இயல் இசை நாடகம் நடிகர் திலகம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.