இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட, பிரிவினையை எதிர்த்த முஸ்லிம்கள் குறித்த அத்தியாயத்தை டாக்டர் ஷம்சுல் இஸ்லாம் ஆவணப்படுத்தியுள்ளார். இது சீரிய ஆய்வின் அடிப்படையிலான, போற்றுதலுக்குரிய, தனித்துவமான சாதனைப் படைப்பாகும்.
– டாக்டர் இஷ்தியாக் அகமது, தகைசால் பேராசிரியர், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தங்கள் இன்னுயிரை விலையாகக் கொடுத்த பிரிவினைக்கு எதிரான முஸ்லிம்கள், மேற்கூறிய காரணங்களுக்காகவே அதிகாரப் பூர்வ பாகிஸ்தானிய வரலாற்றில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம் அவர்கள் இந்திய வரலாற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகும். அப்பட்டமாக விடுபட்ட இவ்வத்தியாயத்தை, ஷம்சுல் இஸ்லாமின், ஆழ்ந்து வாசிக்கப்பட வேண்டிய, நுணுக்கமான ஆய்வின் அடிப்படையிலான இப்புத்தகம் மகத்தான முறையில் இட்டு நிரப்புகிறது.
– ஆனந்த் பட்வர்தன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.