Description
இது ஒரு அதிரடி அரசியல் த்ரில்லர் கதை. இளம் வருமானவரி அதிகாரிகளான சாதுர்யாவும் நித்திலனும் “ஆப்ரேஷன் ஆக்ட்டோபஸ்” என்ற சங்கேத பெயரில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் 500 கோடி ரூபாய் கருப்பு பணத்திற்கான ஆதாரத்தையும் அதன் இருப்பிடத்தையும் தேடி அவரின் பண்ணை வீட்டுக்கு அவருக்கு தெரியாமலேயே செல்கின்றனர். அவர் ரௌடியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு மோசமான அரசியல்வாதி மாறியவர் மற்றும் எதிரிகளை கொலை செய்ய சற்றும் தயங்காதவர் என்றும் அறிந்தும் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர். அங்கு ஆரம்பிக்கும் கதை, எதிர்பார்க்காத ஒரு கொலை நடப்பதில் இருந்து சூடு பிடிக்கிறது. அதன்பின நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் திடுக்கிடும் திருப்பங்களுடன் பயணிக்கிறது. அதே பணத்தை தேடி சில சதிகார கும்பல்களும் அரசாங்கத்தை சார்ந்த சில துறைகளும் களம் இறங்குகின்றன. ஒரு கட்டத்தில் தொடர் மரணங்கள், கொலைகள் காரணமாக போலீஸ் துறையும் தன் பங்குக்கு விசாரணையை துவக்குகிறது. இந்த ஆட்டத்தில் நண்பர்கள் எதிரியாக மாறுகிறார்கள். எதிரிகள் நண்பர்களாக மாறுகிறார்கள். முடிவில் என்ன நடக்கிறது? பரபரவென நாலா திசைகளிலும் பறக்கிறது அதிரடி அரசியல் கதை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.