இரா.முருகன் குறுநாவல்கள்

( 0 reviews )

530 504

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக.

யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான்.
நான்தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிற ஆச்சரியமான விஷயத்தைப் பற்றிக் கண்கள் செருகப் பாடிக்கொண்டிருக்கிறேன்.

ரஞ்சனாவின் கைகள் ஒரு பிரம்மாண்டமான தாமரையை அபிநயிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அந்தத் தாமரை பூரணமாக விடரும் முன், நேரம் ஆகிவிட்டதென்று திரைக்குப் பின்னால் நிறுத்தாமல் மணி அடிக்கிறார்கள்.

‘இன்னும் கொஞ்சம்தான். நீங்கள் மட்டும் ஒத்தாசை செய்தால் இதோ முடித்துவிடலாம்’ என்பது போல் ரஞ்சனா கண்களால் விண்ணப்பிக்க, மத்தளக்காரன் தன் வாசிப்பை ஜீவன் முக்தியடைய உபாயமாக உணர்ந்து ஒருமித்த சிந்தனையுடன் கொட்டி முழக்கி, என்னையும் கடைத்தேற்றக் கண் காண்பிக்க, பின்னால் தொடர்ந்து ஒலிக்கும் மணியின் அலறலையும் பொருட்படுத்தாது வயிற்றை எக்கி எக்கிப் பாடி… மூத்திரம் முட்ட விழித்துக்கொண்டேன்.

மணிச் சத்தம் மட்டும் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

You may also like