Description
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.