Description
இந்த தொகுப்பில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலையலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச்சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்றுகூடச் சொல்லலாம். ஒருவர் பெருந்தொற்றின் தற்காலப் பாடுகளை எழுதியிருக்க, மற்றொருவர் இது எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்று எழுதியிருந்தார். இன்னொரு கதையில் சிறைப்பட்ட வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவனது துயரமும், அழிவுக்குப் பின்னரான உலகில் தன்னைப் பரிணமித்துக் கொள்ளும் உயிரியாக எப்படி இருக்கப் போகிறான் மனிதன் என்கிற கதையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாதவை. வெறும் நடப்பியல் பேசும் கதைகளாக இல்லாமல் அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல், நம்பிக்கை என வெவ்வேறு வகையான கதைகளால் இத்தொகுப்பு முக்கியம் பெறுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.