மூன்றே நிபந்தனைகள்:
இன்ஸ்பெக்டர் இந்திய தேவன் அண்ணா சாலையின் நடுவில் சட்டையில்லாமல் நின்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகவேண்டும்.
சிறையில் இருக்கும் குறிப்பிட்ட தீவிரவாதிகளின் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.
தமிழ்நாடு அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவேண்டும்.
அவ்வளவுதான். இருபத்து நான்கு மணி நேரம்தான் இந்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற.
மறுத்தால்..? சென்னை நகரமே பொசுங்கிச் சீரழிய போபாலைவிட மோசமான க்ளோரின் வாயு திறந்துவிடப்படும்.
தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒருவனிடம் அபாயகரமான ரசாயனமும், அதைப் பயன்படுத்தும் நுட்பமும் கிடைத்துவிட்டால் ஒரு மாநகரத்துக்கே சவால்தான்..!
கரையும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை நோக்கி ஒரு நகரத்தையே நகர்த்திச் செல்ல..
நரேனும், வைஜயந்தியும் நேரத்துக்கு எதிராக ரேஸ் ஓட முற்பட..
எடுத்தால் வாசிப்பதை நிறுத்தமுடியாத பரபர நாவல்..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.