Description
அமெரிக்கா என்றதும் நினைவுக்கு வரும் ஒரு சில நிறுவனங்களில் ஒன்று வால்மார்ட். இந்த உயரத்தை எப்படி அடைந்தது அந்நிறுவனம்? · உட்கார்ந்த இடத்திலிருந்து உலகிலுள்ள எவரையும் பார்க்கலாம். எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் வகுப்பெடுக்கலாம். இதையெல்லாம் ஙூணிணிட் சாத்தியமாக்கியது எப்படி? · ஸ்டார்பக்ஸ் எனும் பளபளப்பான பெயருக்குப் பின்னாலிருப்பவர் யார்? நிர்மாவின் வெற்றிக்கு என்ன காரணம்? ஷிவ் நாடாரின் வெற்றி ரகசியம் என்ன? · நௌக்ரி டாட் காம், டோமினோஸ் பீட்ஸா, அப்போலோ, அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை எவ்வாறு பிரபலமடைந்தன? நம் வாழ்வையும் வாழ்க்கை முறையையும் முற்றிலுமாக மாற்றியமைத்த சாதனையாளர்களின் கதையை ரத்தினச் சுருக்கமாக, சுவையான நடையில் அளிக்கிறார் பாலு சத்யா. நன்கறிந்த பிரபலங்களை மட்டுமின்றி, அதிகம் அறியப்படாத முக்கியமான ஆளுமைகளையும் இடையிடையே அறிமுகப்படுத்துகிறார். படிக்கவும் ரசிக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற வண்ணப் பூங்கொத்து இந்நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.