Description
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல். தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தோப்பில் முஹம்மது மீரானின் இந்த நாவல், 1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.