Description
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிட மிருந்து பறித்தெடுக்க முயன்றனர் பறங்கிகள். மரைக்காயர்களின் உரிமைப்போர் வீரஞ் செறிந்தும் அற்புதங்களால் நிரம்பியும் இருந்தது. இந்தக் காலத்தின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு இறங்குகிறது நவீன காலம். அன்றைய வீரத்தின் விளைநிலமாக இருந்த சமயம், இன்று தன் அதிகாரத்தை விஸ்தீரணப்படுத்த விரும்புகிறது. சமயத்தின் பீடத்தில் அன்று பெரும் அங்கமாக இருந்தவர்கள் இன்றும் அப்படி இருக்க முடிகிறதா? சமயத்தின் ஆட்சி என்பதாக நாம் புரிந்துகொள்வது எதை? இவற்றின் முரண்களைத் தன் படைப்பு அழகியலால் உந்தித் தள்ளிக்கொண்டு வருகிறார் தோப்பில். வரலாற்றுக்கும் புனைவுக்குமான இணைப்புப் பாலமே இக் ‘குடியேற்றம்’. -களந்தை பீர்முகம்மது
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.