Description
பிறப்பு, நோக்கம், செயல்கள், முடிவு குறித்த புதிர்கள் அனைத்திற்கும் விடையளிக்கும் விதமாக, அர்ஜுனனுக்கு போதிப்பது போல், எக்காலத்திற்குமான உலக மாந்தர்களுக்கும் அருளிச் செய்யப்பட்டது பகவத்கீதை. கீதையில் முழுக்கப் பொருள் பொதிந்த சொல்லாடல் அதிகம். அத்தகைய கீதையின் வசம் இந்நூலாசிரியர் மனதைப் பறிகொடுத்திருக்கிறார். சரணாகதியின் மூலம் அர்ஜுனனுக்கு வசப்பட்ட அதே பகவான் கிருஷ்ணர், கீதையின் வழியாக சரஸ்வதி சுவாமிநாதன் அவர்களுக்கு எளிதாக வசப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை. – ஆச்சார்யா ஸ்ரீ வர்மா கீதையை Ôமௌன வியாக்கியானம்Õ என்றும் சொல்வார்கள். காரணம், காலம் கடந்த நிலையில் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற பரிமாற்றம். இந்த இடங்களை நாம் புரிந்து தெளிய வேண்டுமெனில் நாம் கொஞ்சம் அந்தர்முகமாக இருக்க வேண்டும். இறுக்கிப் பிணைக்கப்பட்ட தந்திக் கருவியினின்று எழும் பெரும் வீணையின் நாதம் போல கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ராஜ வாத்தியமாக மாற்றி இருக்கிறார் சரஸ்வதி சுவாமிநாதன். ஏனெனில், கீதை என்றாலே அதனுள் கீதமும் அடக்கம். – கிருஷ்ணா பகவத்கீதை பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மூன்றையும் ஆழ்ந்த பொருளுடன் விவரிக்கிறது. இம்மூன்றும் தனித்து இயங்குவதில்லை. ஒன்றுடன் ஒன்றாக பிணைந்திருக்கிறது. மனம் – உடல் – செயல் இம்மூன்றும் தனித்திருத்தல் என்பது நிறைவின்மை. மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் ஒருங்கிணைப்புடன் செயல்படுகையில் உச்சபட்சமான ஆன்மிகச் சாத்தியங்கள் மலர்கின்றன. இந்த நூல் பகவத்கீதையில் பொதிந்துள்ள ஆன்மிக சாரத்தின் அறிவுக் களஞ்சியம். இதில் விவரிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் சரஸ்வதி சுவாமிநாதன் புலமைக்குச் சான்றாகவும், அவருக்கே உரிய தனிமுத்திரையுடனும் திகழ்கின்றன.
– மஞ்சுநாத்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.