ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள்

( 0 reviews )

360 342

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

ஆன்மீகத் தளத்தில் மாபெரும் மாற்றத்தை விதைத்த சான்றோர்கள். அருளாளர்களின் அருட்செயல்களை எடுத்துக்கூறுவதாக “ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள்” எனும் இந்நூல் அமைந்துள்ளது. ஆன்மீகம் என்பதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் செய்த அருஞ்செயல்களை இந்நூல். அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது ஆன்மீகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
பேரூராதீனம். கோயம்புத்தூர்,

இந்தச் சமூகத்தில் இருக்கிற சாதியக் கொடுமைகள், சமயச் சண்டைகள். மத வெறியின் பெயரால் நடக்கும் அட் டூழியங்கள். பழமைவாத மூடநம்பிக்கைகள் போன்றவற்றை தோலுரிக்கும் நூலாசிரியர். இவற்றிற்கு எதிராக சமர் புரிந்த சீர்திருத்தவாதிகளின் பட்டியலையும் நமக்குத் தருகிறார். இதனை வாசிக்கும்போது நம்மிடம் பல கேள்விகளையும் சவால்களையும் இது எழுப்புகிறது.

அருள் முனைவர் எம்.சி.ராசன்,
வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நூலில் காந்தியின் ஆன்மீகம். விவேகானந்தர் பார்வையில் ஆன்மீகம். மகாத்மா ஜோதிராவ் புலே காட்டிய ஆன்மீகம், விடாது சனாதனம்.இயற்கைப் பேரிடரில் ஞானம், சமய நல்லிணக்கம் வளர்த்த மன்னர்கள்.கடவுளுக்கு மொழி உண்டா போன்ற கட்டுரைகள் மனதில் நிற்கின்றன. மேலும் புத்தர், இயேசு, முகமது நபிகள் நாயகம், மற்றும் பரமஹம்சர் வள்ளல் பெருமான். காரல் மார்க்ஸ். டார்வின் என மனித குல மேன்மைக்காக வாழ்ந்து காட்டியவர்களின் பதிவுகள் அருமை,

தமிழ் மாமணி கு.ஜமால் முகமது, ஈரோடு.

இன்றைய இந்தியச் சூழலில் மத உணர்வுகளைத் தூண்டி. மத வேறுபாடுகளைப் பெரிதாக்கி. பெரும்பான்மையான இந்து மக்களின் உணர்வுகளை அரசியலில் முதலீடாக்கி அதிகாரம் கைப்பற்றுகின்ற சூழலில் ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள் எனும் நூல் அனைவருக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மரு.த.அறம்,
பொதுச்செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

You may also like