Description
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை.
உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் ‘நம்பர் 1 ஆக’ மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம்.
அள்ள அள்ளப் பணம், காலம் உங்கள் காலடியில், உஷார்! உள்ளே பார்!, மனதோடு ஒரு சிட்டிங், இட்லியாக இருங்கள் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம. வள்ளியப்பனின் இந்தப் புதிய புத்தகம் சந்தேகமில்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும்போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.