Description
உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப்போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார். துயரம் என்னவெனில், அவர்கள் தமக்கென இருக்கும் வாழ்வை எத்தனம் செய்யவே முடியவில்லை. மாறுபட்ட இரு கருத்தியல்களுக்குள் சிக்கிக்கொள்கிற அவலத்தோடு பீமுடுக்குக்குத் தாவி ஓடுகிறார்கள்; குத்துண்டு மாள்கிறார்கள். பின்னர் அபூர்வக் குதிரை மீதேறி நாலாம் ஆகாசம், சொர்க்கப் பூங்காவனம், பூங்காவனத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் ஹுருல்ஈன் பெண்கள் என வானுலக சஞ்சாரமும் கொள்கிறார்கள். இப்படியான வாழ்வின் அலைவுறும் பிம்பமே ‘அஞ்சுவண்ணம் தெரு‘. _களந்தை பீர்முகம்மது
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.