Description
முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்கிறது. அதை துவேஷமாக மாற்ற இந்துத்துவ வெறியர்களின் திட்டமிட்ட முயற்சிகள் தொடர்கின்றன. உள்ளூர் உழைப்பாளி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமே பொதுவான சந்தேகத்திற்கு ஆளாக்கப்பட்டு சுயமரியாதையை இழந்து வாழவேண்டிய சூழல் தொடர்கிறது. இந்த நிலையில் முஸ்லிம்கள் தங்களை அமைப்பு ரீதியாக திரட்டிக்கொள்ள, முஸ்லிம் அடையாளம் ஒரு நேர்மறை சிந்தனையின் பகுதியாக இருக்க முடியும் என்கிறார் பாலகோபால். மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் இந்த அடையாளத்தை எதிர்மறையாக பார்க்காமல் இன்றைய இந்திய சூழலில் நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.