எழுதுபவனின் தனிமையும், எழுத்தாளனுக்கு இருந்த துக்க மனநிலையும் முக்கியமானவை. எவன் துயரமாக இருக்கிறானோ, எவன் தனிமையாக இருக்கிறானோ, எவன் காதலாக இருக்கிறானோ அவனுக்குத்தான் கவிதை அதிகம் வசப்படுகிறது. எப்போதுமே மனதின் அடியாழத்திலிருந்து துயரத்திலும், தனிமையிலும் கவிதையைக் கண்டெடுப்பவர் பாலை. உயர்ந்த கவிதைக்குரிய நற்குணங்கள் பாலையின் கவிதைகளில் உள்ளன.
கைவிடப்பட்டவர்கள், அடிமைப்பட்டவர்கள், அனாதைகள், துன்பத்தில் உழலும் பெண்களென்று விளிம்பில் வாழ்பவர்களையே பாலை தன் கவிதைகளில் எழுதுகிறார்.
ரஷ்யாவில் பிறந்த மாபெரும் கதை சொல்லி தமிழ்நாட்டில் சமகாலத்தில் கவிஞனாகப் பிறந்திருந்தால் பாலையாகவே இருந்திருப்பார். சந்தேகமின்றி உறுதியாகச் சொல்வேன், பாலை தஸ்தயெவ்ஸ்கிக்கு நிகரான ஒரு தமிழ்க் கவிஞன்.
-ஸ்ரீநேசன்