பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன. இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே.
இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில், அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது.