Description
பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத் தீவிரமாக வெளிப்படுத்திய நாவல்கள் இந்திய அளவில்கூட மிகவும் குறைவுதான். இதன் பாத்திரங்கள் தங்களால் இட்டு நிரப்ப முடியாத ஏதோ ஒன்றைத் தேடித் தம்மிடமிருந்து தாமே விலகி ஓடிக்கொண்டிருக்கின்றன.. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு மர்மமான நாவல் போலத் தோற்றம் தந்து, வாசிப்பவரை வாழ்வின் மர்மங்களை விடுத்து உறவுகளின் பருண்மையான அர்த்தங்களைத் தேடவைக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.