Description
‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? தந்தை பெரியாரின் இதழியல் என்ற தலைப்பில் அமைந்துள்ள இத்தொகுப்பில், 1925-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரையில் குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் வெளிவந்த இதழியல் பேசுபொருள் சார்ந்த தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளும், தலையங்கங்களும், கட்டுரைகளும், செய்தி விளக்கங்களும் கால வரிசைப்படி தொகுக்கப்பெற்றுள்ளன. பார்ப்பன மேட்டுக்குடி ஊடகங்கள் அன்றைக்கு எங்ஙனம் நம்மை ஆட்டிப்படைத்தன? என்பதைப் புரிந்து கொள்ளவும், உவகை உணர்ச்சிகளையும் கருத்துத் திணிப்புகளையும் மைய நோக்கமாகக் கொண்ட இன்றைய ஊடகங்களிலிருந்து பொதுமக்கள் தமது கருத்தியல் தற்சார்புத் தன்மையை நிலைநாட்டிக்கொள்ளவும், அதிலும் குறிப்பாக ஊடகங்களைப் புரிந்து கொள்ளவும் இத்தொகுப்பு பெருந்துணையாக அமையும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.