Description
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை.
ரூபலா:
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள்.விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு :
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.