எழுதுதல் என்பது, ஏதோ ஒரு வகையில் மனதில் தத்தளிக்கும் நினைவுகளை ஆற்றுப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. நிலத்தின் பெரும் பாடுகளை, அது சார்ந்த வாழ்வியலை, அதன் தன்னெழுச்சிகளை, தன்னொழுக்கங்களை என்று அனுபவங்களின் முன் பின் நிகழ்வுகளையும் அதனூடாக புனைவுகளையும் இணைத்துப் பார்த்தலின் வழியேதான் படைப்புறுவாக்கம் கொள்கிறது. அவ்வாறு உருவான படைப்புகளில் மனிதர்களும் அவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளுமே நேரடி சாட்சிகளாகின்றன. அவர்களை, அவைகளை புறந்தள்ளிவிட்டு வேறொன்றை எழுதிவிட பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. இக்கதைகளின் கருப்பொருள்களாக நிலங்களும் அதோடு பின்னிப்பிணைந்த உயிர்களுமே மையமாகின்றன. மேலதிகமாக அவர்களுடைய அல்லது அவைகளுடைய வாழ் வெளியின் வாதைகளே பெரும்பாண்மையாக இடங்கொள்கின்றன. இவர்களின், இவைகளின் எழுத்து சாட்சிகளானவையே இச்சிறுகதைகள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.