Description
மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதுக்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்க நேர்கிறது. திண்ம இருள் மேலிருந்து கனங்கொண்டு கீழ் நிலம் நோக்கி அமுக்குகின்றது. இருளுக்கும் கனதியுண்டோ?
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.