“வேறொன்றுமில்லை புதிதாக இங்கே! கடலில் தான் காற்றழுத்தம் ஏற்படும் என்பது இயற்கை. இந்தக் கவிதை நூலில் காதலியின் கையெழுத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு கவிதை மழை பெய்கிறது. இந்த மழையால் காதலர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலேயே நிவாரணம் தருகிறது இந்நூல். காதலில் எல்லா பக்கங்களையும் திரும்பிப் பார்த்துள்ளார் விமலாபாரதி -வைரவரி வானரசன்”. விமலா பாரதி (1992) இயற்பெயர் விமலா, சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர். தற்போது சென்னைப் பெருநகர சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும், ஓவியத்தில் தனியாத ஆர்வமும் கொண்டவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘உளறல் கொஞ்சம் கூடுதலானால்’ 2019ஆம் ஆண்டில் வெளியானது. “வேறொன்றுமில்லை புதிதாக இங்கே” இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.