Description
அனைத்தும் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதி வைத்திருந்த உண்மைக்கு நெருக்கமான கதைகள். இப்போதுதான் அவை பிரசுர வடிவம் பெறுகின்றன. நம்மைச் சுற்றிதான் எத்தனையெத்தனை சம்பவங்கள். படிப்பினைகள். எல்லாவற்றையும் ஒருசேரப் படிக்கும்போது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொது அம்சம் இக்கதைகளில் புலப்படுவதை உணரலாம். கதை முடியும்போது ஒரு தொடர்ச்சி இருப்பதாக வாசக மனம் எண்ணினால், அதுவே எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. நம் காலத்துக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம். எழுதத் தோன்றுவதால் தீவிர எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்கும் இடைப்பட்ட எழுத்துப் பயணம் தொடர்கிறது. நெருக்கடியான மனநிலையில் வாசிப்பதும் எழுதுவதும் அந்த மனதை இயல்பு நிலைக்குத் திருப்ப உதவுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.