Description
இலக்கியம் மற்றும் ஆடற்கலை என பல தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப்
படைப்புகளை உருவாக்கி வருபவர்.
தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். சமகாலச் சமூகப் பிரதிபலிப்புகளுடன் நடன-நாடகப் படைப்புகளை உருவாக்கி வருபவர்.
இதுவரை இவரது 6 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. «கருவறைக்கு வெளியே’ எனும் தலைப்பில் ஒரு கதைத் தொகுப்பும் 2015இல் வெளிவந்தது. வீட்டு எண் இவரது 8-வது நூல்.
இந்த நூலிலுள்ள பன்னிரெண்டு கட்டுரைகளில் அவரது கலை இலக்கிய அக்கறைகளை வளமான மொழியாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். எளிமையான நடையில் தீர்க்கமான கருத்துக்களை முன் வைக்கின்றார். தமிழ்நாட்டு சிறுபத்திரிக்கை தமிழ்நடைக்கு பரிச்சயமான நமக்கு, மேடையில் வீசும் ஒரு மெல்லிய பூங்காற்று போல் ஈழத்தமிழ் வருகின்றது. துல்லியமான சொற்பயன்பாடும் தெளிந்த நடையோட்டமும் நம்மை ஈர்க்கின்றது.
-தியடோர் பாஸ்கரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.