வீரத் தெலங்கானா புரட்சி படிப்பினைகள்
₹800 ₹760
- Author: தோழர் சுந்தரய்யா
- Translator: க. மாதவ்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: கட்டுரை, புரட்சி
- Publisher: சிந்தன் புக்ஸ்
Additional Information
- Pages: 600
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
தெலங்கானாப் புரட்சியின் முதல் களபலி தொட்டி கொமரய்யாவின் நினைவுநாள்….
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நாள்….
கடிவெண்டி கிராமத்தில் மட்டுமல்ல, தெலங்கானாவில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் கடைபிடிக்கப்பட வேண்டிய நினைவுநாள்…
கடிவெண்டி, விசுனூரு தேஷ்முக் ராமச்சந்திராரெட்டியின் தாயார் ஜானம்மா தொரசானி கோட்டை கட்டி வசிதது வந்த ஊர். ஜானம்மா தொரசானி கொடுமைகளுக்கு பேர்போனவர். சுத்து வட்டார கிராமங்களில் ‘கொள்ளிவாய் பிசாசு’ யென புகழ்பெற்றவர்.
ஜானம்மா தொரசானிக்கு சவால்விட்டு கடிவெண்டி கிராமத்தில் சங்கம் அமைந்தது. ஆந்திர மகாசபை தலைவர்கள் கடிவெண்டி கிராமத்திற்கு வந்தனர். மக்கள் அவர்களை ஆரவாரமாக வரவேற்றனர். தனித் தனியாக இருக்கும் மெளிதான நார் சுலபமாக அறுப்படும். நாரை திரித்து தடிமனான கயிறாக்கினால் வலிமைமிக்க யானையைக் கட்டி போடலாம் என உதாரணங்களுடன் ராவி நாராயணரெட்டி போன்ற தலைவர்கள் உழைக்கும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பேசியதை மக்கள் விரும்பி ஏற்றனர்.
கடிவெண்டியில் சங்க அலுவலகம் அமைந்தது. ஒரு அழைப்பு விட்டால் போதும், எந்த நேரத்திலும் நூற்று கணக்கில் மக்கள் கூடும் அளவிற்குச் சங்கம் செல்வாக்குப் பெற்றது. நிலப்பிரபுத்துவ கொடுமைகளை இனி சகித்து கொண்டிருக்க மாட்டோம் என மக்கள் தீர்மாணித்தனர். சங்கத்தையும் சங்கத் தலைவர்களையும் பாதுகாக்க என்னேரமும் மக்கள் தயாராக இருந்தனர்.
கடிவெண்டி கிராமத்தில் வெட்டி உழைப்பு நிறுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்திக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஒரு நாள் வேலைநிறுத்தம் நடந்தது. விவசாயிகள் கூலியை உயர்த்திகொடுக்க சம்மதித்தனர். மற்ற விவசாயிகள் வழங்கும் கூலியையே தொரசானியும் வழங்க வேண்டுமென சங்கம் நிர்ப்பந்தித்தது. தொரசானி ஆணவத்தில் கொதித்தாலும் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. மற்ற விவசாயிகள் கொடுத்த கூலியையே அவரும் கொடுத்தார்.
கடிவெண்டி கிராமத்தில் மக்கள் ஒன்றுகூடி தினந்தோரும் ஊர்வலம் நடத்தினர். சங்கம் வாழ்க, கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க, வெட்டி உழைப்பு ஒழிக, அராஜகம் ஒழிக,அநியாயமாக அபகரித்த நிலங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பிக் கொடு, ஆகிய கோஷங்களை முழங்கி தினந்தோரும் ஊர்வலங்கள் நடந்தன.
ஜலை 4 ஆம் தேதி மஸ்கின் அலி மற்றும் தேஷ்முக்கின் சொந்த தாய்மாமன் கட்டம் நரசிம்மாரெட்டி தலைமையில் 40 அடியாட்கள் விசுனூரிலிருந்து கடிவெண்டிக்கு வந்தார்கள். கலகம் எற்படுத்தும் நோக்கத்துடனேயே அவர்கள் வந்தார்கள். எரமரெட்டி மோகன்ரெட்டி, நல்லா நரசிம்முலு போன்ற சங்க தலைவர்களை கொலை செய்யும் நோக்கத்துடனேயே அவ்ர்கள் வந்தார்கள். அன்று மாலை அடியாட்கள் குடிபோதையில், ஆத்திரமூட்டும் வகையில் சங்க முக்கியஸ்தர்களின் வீட்டு கூரைகளில் கல்வீசி தாக்கத் துவங்கினர்.
மக்கள் சங்க அலுவலகத்திற்கு புகார்களுடன் வந்தார்கள். எரமரெட்டி மோகன்ரெட்டி தலைமையில் இதை எதிர்ப்பார்த்திருந்த 100 பேர் தடிகளுடன் கோஷமிட்டப்படி புறப்பட்டனர். ஊர்வலம் உர் மையப்பகுதியை அடையும்போது மேலும் 200 பேர் சேர்ந்துக் கொண்டனர். கோபத்தில் கொதித்த கோஷங்களால் ஊரே அதிர்ந்தது. மக்கள் ஒன்று திருண்டு எதிர்த்து தாக்குவதை எதிர்ப்பாராத அடியாட்கள் கதி கலங்கினர்.
காலையிலேயே ஆட்டு மந்தையை பத்திச்சென்ற தொட்டி கொமரய்ய அப்போதுதான் வீடுதிரும்பியிருந்தார். ஆடுகளை தொட்டியில் அடைத்து. கைக் கால்களை கழுவி சாப்பிட உட்கார்ந்தார். அப்போது தாக்குதல் அழைப்பு வந்தது. எழுந்தான் கொமரய்ய, தடியை கையிலெடுத்து ஓடினான். அவருடைய அண்ணன் தொட்டி மல்லய்ய அவருக்கு முன்பாகவே அங்கிருந்தார். தொட்டி கொமரய்ய முன் வரிசையில் நின்றார். தான் புதிதாகக் கற்றுக் கொண்ட கோஷங்களை ஆவேசமாக முழுங்கியபடி முன்வரிசையில் நின்றிருந்தார் கொமரய்ய.
மக்களின் கோபாவேசத்தைக் கண்டு கலவரமடைந்த அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டனர். கொமரய்ய வயிற்றை குண்டு கிழித்தது. குடல் சரிந்தன. இடது கையால், சரியும் குடலை வயிற்றுடன் அமுக்கிபிடித்து. வலது கை முஷ்டியை உயர்த்தி “சங்கம் வர்த்தில்லாளி” “செங்கொடிக்கு ஜே” கோஷமிட்டான் கொமரய்ய. தான் புதிதாகக் கற்ற கோஷங்கள், வியந்து வியந்து முழுங்கிய கோஷங்கள், கோஷமிட்டப்படியே தரையில் சாய்ந்தான் கொமரய்ய.
தொட்டி மல்லய்ய. ரேபள்ளே கொண்டய்ய. ரேபள்ளே லக்ஷ்மி நரசய்ய ஆகியோர் குண்டடிபட்டார்கள். துப்பாக்கிகளால் சுட்டதால் மக்கள் சிதறி ஓடவில்லை. “துப்பாக்கிகள் என்ன செய்யும் பார்ப்போமடா”, “உங்களை விடமாட்டோமடா”, என்று ஆவேசமாகக் கூச்சலிட்டப்படியே மக்கள் நெருங்கினர். பயந்துபோன அடியாட்கள் கோட்டைக்குள் பதுங்கி தாழிட்டு கொண்டனர். மக்கள் கோட்டையை தீயிட்டு கொளுத்த தயாரானார்கள். வைக்கோலை கொண்டுவந்துக் கோட்டையை சுற்றி போட்டனர்.
சுத்து வட்டார கிராம மக்கள் பல்லாயிர கணக்கில் கடிவெண்டியில் கூடினர். சவப்பரிசோதனைக்காக. ஜனகாமா கொணடுச் செல்லப்பட்ட கொமரய்யாவின் பூத உடலை கடிவெண்டிக்கு கொண்டுவர போலிஸ் மறுத்தது.
தேஷ்முக் பழத்தோட்டங்கள், தொரசானி பழத்தோட்டங்கள், வயல்கள் நாசமாக்கப்பட்டன. ஜானம்மா தொரசானியின் கோட்டை மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டது. அவர் குடும்பத்திற்காக எந்த வேலையையும் செய்ய மக்கள் மறுத்தனர். வெளியூர்களிலிருந்து கூலியாட்களை கொண்டுவந்து விவசாயம் செய்யும் முய்ற்சிகளும் முறியடிக்கப்பட்டன.
கொமரய்யாவின் மரணம் தெலங்கானா போராட்டத்தின். பண்பு மாற்றத்தின் துவக்கமாக அமைந்தது. தாய் மொழிப்பற்று, கல்வி மற்றும் இலக்கிய ஆர்வம், வெட்டி உழைப்பு, நிலப்பிரயுத்துவ கொடுமைகளுக்கு எதிர்ப்பு, நைஜாம் அரசதிகாரிகளின் கெடுபிடி வசூல்களுக்கு எதிர்ப்பு, அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு என்றிருந்த போராட்ட பண்பு, மாற்றமடைந்தது. பிரதேசம் முழுவதிலும் நிலப்பிரபுத்துவத்திற்கு சவால்விட்டது. நிலப்பிரபுக்கள் விவசாயிகளை ஏமாற்றி அபகரித்த நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், உழுபவனுக்கே நிலம் சொந்தம், நைஜாம் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும், விசாலாந்திராவில் பிரஜாராஜ்யம், மொழிவாரி மாநிலங்கள் அமைய வேண்டும்,ஆகிய கோரிக்கைகளுடன் தெலங்கானாப் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாக பண்பு மாற்றமடைந்தது.
கொமரய்ய மரணம் போராட்ட இலக்கியமானது. கவிஞர்கள், கலைஞர்கள் கடிவெண்டியைத் தரிசித்தனர். இடது கையால் சரியும் குடலை அமுக்கிபிடித்து, வலதுகை முஷ்டியை உயர்த்தி கோஷமிட்டபடி கொமரய்ய சாய்ந்த இடத்தைப் பார்வையிட்டனர். உத்வேகமடைந்த படைப்பாளிகள் களமிறங்கினர்.
கொமர்ய்ய உய்யால பாட்டானார். கொமரய்ய பதுகம்மா பாட்டானார். கோலாட்ட பாட்டானார் கொமரய்ய.புர்ரகதையானார் கொமரய்ய. கொல்ல சத்துலு நடனமானார் கொமரய்ய. கொமரய்ய தெலங்கானா மக்கள் இலக்கியமானார், இலக்கியமான கொமரய்ய ஊர் ஊராக பயணப்பட்டனான்.
கொமரய்ய, ஹரீந்திரநாத் சட்டோப்த்யாயவின் கவிதையில் நடந்து, ஆங்கிலத்திற்கு சென்றான், வங்கத்திற்கு சென்றான், சீனத்திற்கு சென்றான்.
கொலைக்கார பாவிகளே! வாழ்கிறான் எங்கள் கொமரய்ய! என்றும் பதினெட்டு வயது இளங்காளையாகவே வாழ்கிறான்! சரியும் குடலை இடது கையால் அமுக்கி பிடித்து, வலதுகை முஷ்டியை உயர்த்தி கோஷமிட்டப்படியே வாழ்கிறான்!
Be the first to review “வீரத் தெலங்கானா புரட்சி படிப்பினைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.