வீர சைவம்
வரலாறு | தத்துவம் | வாழ்வியல்
Rated 0 out of 5
( 0 reviews )₹200 ₹190
You save ₹10.00 (5%) with this book
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
ஆய்வு என்ற பெயரில் சகலத்தையும் இழிவும் செய்யும் இக்காலத்தில் இத்தகைய வரி இயல்பான கனிதலின் வெளிப்பாடே.
வள்ளுவரின் ‘தாள்’, ‘அடி’ போன்ற வார்த்தைகளின் பயன்பாட்டிற்கான காரணத்தை வர்ணாசிரம தர்மத்தோடு ஒப்பி்ட்டு எழுதப்பட்ட பத்திகள் ‘அக்னிகுஞ்சு’ போன்றவை.
வீர சைவ முன்னோடிகளின் வரிசையில் பாடகச்சேரி ராமலிங்கர் இருப்பது ஒரு இனிய அதிர்ச்சி. அவரது சமாதியும், அவர் புனரமைப்பு செய்த தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மனும் நல்லதிர்வுகளை கொண்டது என்பது எனது தனிப்பட்ட அனுபவம்.
காந்தளூர் சாலையை ராஜராஜன் அழித்தமைக்கு அரசியல் காரணமட்டுமல்ல என்ற கருத்து ஏற்புடையதாக இருப்பினும் விவாதம் செய்யக் கூடியதாகவே இருக்கிறது. ( இந்த நூலில் காணப்படும் ஆரியர் வருகை, லெமூரியா கண்டம் பற்றிய தகவலும் நீண்ட, நெடிய விவாதங்களுக்குரியவையே. ) ‘குடிஅரசு’ பத்திரிக்கையின் சில முன்னெடுப்புகளைப் பற்றி ஆசிரியர் மேலும் விவரித்திருப்பின் இன்றைய காலக்கட்டத்தில் தி.க.வினர் நீர்த்துப்போனதை அறிய ஏதுவாயிருந்திருக்கும். மேலும் வீர சைவர்கள் குறித்த கழுகுமலைக் கல்வெட்டுத் தகவல் நல்ல அறிமுகம். ஆயினும் இத்தகைய தரவுகளை உடன் இணைத்திருப்பின் தேடல் உள்ளோர்க்கு எளிதாக இருந்திருக்கும். வீர சைவ உட்பிரிவுகள் குறித்த கெஜட்டில் உள்ள தகவல்களை இணைத்திருப்பது சிறப்பு. பக்கம் 65 & 66 ல் விளக்கப்படும் ‘லிங்கதாரணம்’ மற்றும் ‘தீட்டு’ நூலின் மணிமகுடம். பெண் என்பவள் குறித்த தேவர தாசிம்மையர் கூறும் கருத்துக்கள் எனக்கு புதியன. இவரது நான்குவரி விளக்கங்கள் அசத்தலானவை. ( மூலநூல் தகவல் தேவை அண்ணா).
வீர சைவ இஷ்டலிங்க வழிபாடு செயல்முறைகள் விளக்கமானவை ஆயினும் இதனை தற்சமயம் பயிற்றுவிப்பவர்கள் குறித்த தகவல்களையும் இங்கே ஆசிரியர் சேர்த்திருக்கலாம். நீண்டநாளாக படிக்க வேண்டும் என நினைத்த ‘திருமந்திரம்’ நூலினை உடனடியாக வாசிக்கும் ஆவலைத்தூண்டும் கட்டுரை, ‘வீர சைவத்தின் தேவை’ ( பக்கம் – 93 ). விருத்தாசலம் பழமலைநாதர் குறித்த பழமை முன்பே அறிந்து பயணித்த ஒன்று. மீண்டும் பயணிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. நூலின் 121 – 125 பக்கங்கள் நூலின் ஆசிரியர் போட்டிருக்கும் உழைப்பிற்கு சாட்சியங்கள். இதில் சேர்த்தவைகளை விட அவர் சேர்க்காமல் விட்டவைகள் எத்தனையுண்டோ? என ஊகிக்க முடிகிறது. பொதுவாக இத்தகைய நூல்கள் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு உரியவையாகவே பார்க்கப்படும். ஆனால் இந்த நூல் ஒரு பி.எச்டி கட்டமைப்போடு, கால வரிசையோடு ஒரு எளிய கையேடாக எழுதப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை ஆசிரியர் இந்த நூலை சில இடங்களில் மேம்படுத்தி முதலில் கன்னடத்திலேனும் மொழிபெயர்க்க தகுதியை கொண்டிருக்கிறது. கன்னடத்தில் இந்த நூல் மொழிபெயர்க்கப்படும் போது சற்றே சர்ச்சைக்குரிய தலைப்பும், அட்டைப்படமும் கொண்டிருப்பின் பல நாட்களுக்கு விவாதபொருளாகும் என்பது என் எண்ணம். ( கலங்கியதுதானே தெளியும்.)
முன்மொழிந்துவிட்டேன் இனி… ‘சிவன்’ வழிமொழியட்டும்.
என்றென்றும் அன்புடன்,
தந்தையின் பணியில்,
சரஸ்வதி சுவாமிநாதன்.
Be the first to review “வீர சைவம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.