Description
செந்தி எழுதும் கவிதைகள் பாலியல் நினைவுகளின் நிஜமும் புனைவும் கூடியதாகும். தனிமை துறந்து கொண்டாட்ட மனம் கொண்டவை. நவீன வாழ்க்கையின் உள்முகமான காமத்தைப் பகடியாக்கி, வஞ்சித்துப் போற்றி எழுதப்பட்ட இக்கவிதைகள் நவீன கவிதையின் அடையாளமாக முயல்கின்றன. இக்கவிதைகளில் மறைந்தும் தெளிந்தும் காணப்படும் காட்சிகளில் பொருள்படும் அன்றாடம் நிஜமானது. இருளும் பகலும் எங்ஙனம் காமத்தின் நூல்களால் இணைப்புற்றிருக்கிறதெனச் சொல்ல முனைகிறார். கவனித்தும் தவறியும் கடக்கும் பாதையோரங்கள் செந்தியின் வரிகளில் பொருட்படுத்தும் வகையில் கவிதையாகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.