‘நீ வனத்துக்குள் போணும்னாஇ வனம் மொதல்ல ஒனக்குள்ள வரணும்’ – ஆனை ராஜசேகரின் வார்த்தைகள்தாம் எவ்வளவு சத்தியமானவை. மிருகங்களின் நினைவில் காடிருப்பது இயல்பான ஒன்று. ஆனால்இ நினைவில் காடுள்ள மனிதனாக நம்மை மாற்றும் மாய வித்தையை ராம் தங்கத்தின் வன விவரிப்புகள் செய்கின்றன. காடு என்பது நாவலின் ஒரு பகுதி. இன்னொரு பகுதியில் திருவிதாங்கூரின் சரித்திரத்தில் புதைந்திருக்கும் உண்மைகள் கதை மாந்தர்களாக உருப்பெற்றிருக்கின்றன. வனத்தில் இறங்கிய மன்றோ திரும்பிவிட்டான். நான்இ ஆனை அருவியின் அடிவாரத்தில்தான் இப்போதும் நனைந்து கொண்டிருக்கிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.