Description
காலத்தினால் தொன்மையும், கருத்தினாற் செழுமையும் பெற்று விளங்குவது தொல்காப்பியப் பெருநூல் ஆகும். இந்நூலை இயற்றிய தமிழ்ச் சான்றோர் `ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் ஆவார். எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரப் பகுப்பினை உடையது இந்நூல். அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக இயலும் நெறியினைக் கொண்டதாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்துக்கு பண்டை உரையாசிரியர் பெருமக்கள் உரை எழுதியுள்ளனர். அது காலத்தால் முற்பட்டவையாகும். அனைத்து உரைகளும் முற்றிலுமாக இப்போது கிடைப்பது அரிது. இதனைக் கருத்தில் கொண்டே, பழைய உரையை ஒட்டி, இத்தெளிவுரையை புலியூர்க் கேசிகன் சிறப்புற எழுதியுள்ளார். எளிதாகப் புரிகின்ற முறையில் இந்த உரை அமைக்கப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பாகும். -பதிப்பகத்தார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.